
`வேட்டையன்’ திரைப்படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் `கூலி’ திரைப்படம் வெளியாக இருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
குறிப்பாக இந்தப் படத்தில் நாகார்ஜுனா வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் ஹைதராபாத்தில் ‘கூலி’ படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
அதில் பேசிய நாகார்ஜுனா, “நான் இதுவரை நல்ல கேரக்ட்டர் உடைய கதாபாத்திரங்களைத் தான் தேர்வு செய்து நடித்திருக்கிறேன். அது கொஞ்சம் போர் அடித்ததால்தான் இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.
வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் நான் ஓகே சொல்லவில்லை. அதனால் லோகேஷ் கனகராஜ் 7, 8 முறை சந்தித்து என்னிடம் பேசினார்.
ஆரம்பத்தில் தயக்கம் இருந்தாலும் பிறகு எனக்கு கதாபாத்திரம் பிடித்திருந்தால் ஓகே சொல்லிவிட்டேன்.
ரஜினி சாருடன் பணியாற்றியது சிறப்பாக இருந்தது. அவரிடம் இருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன் .

நான் தமிழில் வசனங்கள் பேசும்போது அவர் எனக்கு உதவியாக இருந்தார். அவருடைய அனுபவம் மிகச்சிறந்த ஒன்று.
நான் இந்தப் படத்தில் நெகடிவ் ஆன கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், பாஸிட்டிவான அனுபவத்தையே எடுத்துக்கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…