
‘வாக்கு திருட்டு’ விஷயத்தை கையில் எடுத்து ராகுல் நடத்திய பேரணி,பாஜக-வுக்கு ஷாக் கொடுத்துள்ளது. அடுத்த கட்ட நகர்வு, இன்னும் அதிரடியாக இருக்கும் என்கிறார்கள்.
இன்னொரு பக்கம் ராமதாஸ் Vs அன்புமணி போரில் மறைமுகமாக பாஜக Vs திமுக யுத்தமும் நடக்கிறது. இரண்டு தரப்பும் சில லாபக் கணக்கு போடுகிறது.அடுத்து முன்பு கலைஞரை கையில் எடுத்த பிரேமலதா, தற்போது யுடர்ன் போட்டு, ‘ஜெயலலிதா எனது ரோல் மாடல்’ என்கிறார். தேமுதிக ஆடும் கேம். எச்சரிக்கையோடவே அணுகும் ஸ்டாலினும், எடப்பாடியும்.