
கிருஷ்ணகிரி/ஓசூர்: அதிமுக ஆட்சி அமைந்ததும் விவசாயத்துக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என அதிமுக பொதுச்செய லாளர் பழனிசாமி தெரிவித்தார். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரத்தின் 3-ம் கட்ட சுற்றுப்பயணத்தை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று தொடங்கினார்.
இதில், ராயக்கோட்டையில் அவர் பேசியதாவது: மலர் விவசாயிகளுக்காக ஓசூரில் ரூ.20 கோடியில் சர்வதேச பன்னாட்டு மலர் ஏல மையத்தை அதிமுக ஆட்சியில் திறந்து வைத்தோம். ஆனால், அந்த மையத்தை திமுக அரசு மூடி வைத்துள்ளது. நிகழாண்டில் மா மகசூல் அதிகரித்து கடும் விலை வீழ்ச்சியடைந்தது. பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்கவும், மாங்கனி கொள்முதல் விலையை கிலோ ரூ.13 என நிர்ணயம் செய்ய வலியுறுத்தி, உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்தினோம்.