• August 12, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்​னீர்​செல்​வத்தை விமர்​சிக்க கூடாது என நிர்​வாகி​களுக்கு பாஜக தலைமை உத்​தரவு பிறப்பித்துள்​ளது. தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் தொடர்ச்​சி​யாக ஓபிஎஸ் ஓரம் கட்​டப்​பட்டு வந்தார். இதனால், கூட்​ட​ணி​யில் இருந்து வெளி​யேறு​வ​தாக ஓபிஎஸ் அறி​வித்​தார். முதல்​வர் ஸ்டா​லினையும் 2 முறை சந்​தித்து பேசினார்.

இந்நிலையில், தமிழகம் வரும் பிரதமர் மோடி மூல​மாக, ஓபிஎஸ் சந்​திப்பை நிகழ்த்தி அவரை மீண்​டும் கூட்​ட​ணி​யில் இணைக்க பாஜக தலைமை திட்​ட​மிட்​டுள்​ளது. எனவே, அவருக்கு எதி​ராக யாரும் இனி பொது வெளி​யில் பேசவோ, சமூக வலை​தளத்​தில் கருத்​துக்​களை பதி​விடவோ கூடாது என்​றும், விமர்​சிக்​க​வும் கூடாது என்​றும் நிர்​வாகி​களுக்கு பாஜக தலைமை உத்​தரவிட்டுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *