
திருப்பூர்: 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவின் தோல்வி மேற்கு மண்டலத்தில் இருந்து தான் தொடங்க உள்ளது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை, நேதாஜி மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. ஆட்சியர் மணீஸ் நாரணவரே வரவேற்றார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மாவட்ட நிர்வாகம் சார்பில் முதல்வருக்கு நினைவு பரிசினை வழங்கினார். உடன் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் சு.முத்துசாமி, உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.