
ஒட்டக கண்ணீரில் உள்ள ஆன்டிபாடிகள் பல பாம்பு இனங்களின் விஷங்களை எதிர்க்கும் திறன் கொண்டவை என தகவல்கள் வெளியாகின.
துபாயில் உள்ள ஒரு கால்நடை ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவில் இவ்வாறு வந்ததாக கூறப்பட்டது. இந்த கண்டுபிடிப்புகள் உண்மையா என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.
துபாயில் உள்ள கால்நடை ஆராய்ச்சி ஆய்வகம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் ஒட்டகத்தின் ஆன்டிபாடிகள் பாம்புகள் விஷத்திற்கு எதிராக எப்படி செயல்படுகிறது என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஒட்டகத்தின் கண்ணீர் மற்றும் இரத்த மாதிரிகளை சேகரித்து பல்வேறு விஷங்களுக்கு எதிரான அவற்றின் விளைவுகளை சோதித்தனர். ஆரம்ப முடிவுகளின்படி ஒட்டகத்தின் கண்ணீர் விஷத்தை நடுநிலையாக்கும் பண்புகள் இருக்கக்கூடும் என்று கூறியிருக்கின்றனர்.
குளிரூட்டல் வசதிகள் இல்லாத, வெப்பமான பகுதிகளில் ஒட்டக கண்ணீர் விஷ எதிர்ப்பு மருந்தாக இருக்கக்கூடலாம் என்றும் தெரிவிக்கின்றனர்.
வெவ்வேறு பாம்பு இனங்களின் விஷத்தை ஒட்டக கண்ணீர் நடுநிலையாக்கும் என்று கூறப்படும் தகவல்கள் ஆரம்ப ஆய்வுகளின் முடிவுகள் மட்டுமே, இதற்கான முறையான சரிபார்ப்பு ஆராய்ச்சிகள் மேற்கொள்ள அல்லது ஆதாரங்கள் கிடைப்பதற்கு காத்திருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ஒருவேளை எதிர்காலத்தில் ஆய்வுகளில் ஒட்டக ஆன்டிபாடிகள் குறித்த முறையான முடிவுகள் எட்டப்பட்டால், இவை விஷ எதிர்ப்பு மருந்து ஆராய்ச்சியில் ஒரு புரட்சியை ஏற்படுத்தலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.