• August 12, 2025
  • NewsEditor
  • 0

7.9.2025 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.00 மணி முதல் விஜயவாடா – எடுபுகல்லு ஸ்ரீபார்வதி சமேத காமேஸ்வரர் திருக்கோயிலில் சுயம்வர பார்வதி ஹோமம் நடைபெற உள்ளது. அனைவரும் வருக! அனுமதி இலவசம்!

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

விஜயவாடா. அன்னை ஸ்ரீகனகதுர்கா ஆட்சி செய்யும் அற்புத தலம். சுவாமி மல்லேஸ்வரருடன் அருளும் இந்தத் தாய், காஞ்சி காமட்சிக்குத் துணையாக காவல் புரிந்தவள். தீய சக்தியை ஒழித்து காமாட்சியைப் பாதுகாத்ததால் கருப்பு வண்ணம் மாறி பொன்னிறமாக மாறினாள். அதனால் கனகதுர்கா என்றானாள் என்கிறது புராணம். அன்னை காமாட்சியின் ஆணைப்படி கிருஷ்ணா நதிக்கரை அருகே கோயில் கொண்டு விளங்கி வருகிறாள்.

அன்னை ஸ்ரீகனகதுர்கா இங்கு வந்து தான் அமர வேண்டிய பீடத்தைத் தேடியபோது விஜயவாடாவின் பல பகுதிகளைச் சுற்றி வந்தாள். அப்போது அவள் ஈசனை காமேஸ்வரனாகவும் அன்னை சக்தியை பார்வதியாகவும் தரிசித்த தலம் எடுபுகல்லு. இது ஆந்திராவின் புராதனமான ஆலயங்களுள் முக்கியமானது என்பர்.

திருமண வரம் அருளும் தலமாக இது விளங்குகிறது. மீண்டும் உயிர்த்தெழுந்து ரதியின் கண்களுக்கு மட்டுமே தெரிவான் என்று சாபம் நீங்கிய மன்மதன், இங்கு வந்து காமேஸ்வரனையும் பார்வதியையும் வணங்கி நன்றி தெரிவித்தான் எனப்படுகிறது. விருப்பங்களுக்கு எல்லாம் தலைவன் எனப் பொருள்படும் காமேஸ்வரனை இங்கு வணங்கி அன்னை பார்வதி திருமண வரம் பெற்றாள் என்றும் கூறப்படுகிறது.

தட்ச யாகத்தை அழித்த வீரபத்திரரின் கோபம் தணியாது இங்கு வந்து தவமிருந்து காமேஸ்வரரின் அருளால் சினம் நீங்கி அருள் பெற்றார் எனப்படுகிறது. வில்வவனமாக இருந்த இந்த எடுபுகல்லு காமேஸ்வரர் ஆலயம் பல காலகட்டத்தில் ஆலயமாக உருவாகி உருவாகி அழிந்து போனது.

கனகதுர்கா, மன்மதன், வீரபத்திரர், துர்வாசர் எனப் பலரும் வந்து வழிபட்ட இந்தத் தலம் திருமண வரம் அருளும் பரிகாரத் தலமாக ஆந்திராவில் விளங்கி வருகிறது. இங்கு வந்து அன்னை பார்வதியையும் காமேஸ்வரரையும் வணங்கினால் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். குறிப்பாக உங்களுக்கான நல்ல வரன் அமையும். உங்கள் திருமண வாழ்க்கை இனிமையாக மாறும். உங்கள் மனதுக்கு ஏற்றவாறு வாழ்க்கை அமையும். பிள்ளைப்பேறு கிடைக்கும்.

Vijayawada – Edupugallu Sri Parvathi Sametha Kameswarar temple

எனவே வரும் 7.9.2025 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.00 மணி முதல் விஜயவாடா – எடுபுகல்லு ஸ்ரீபார்வதி சமேத காமேஸ்வரர் திருக்கோயிலில் சுயம்வர பார்வதி ஹோமம் நடைபெற உள்ளது. சுயம்வர பார்வதி ஹோமத்துக்கான மந்திரங்களை பிரம்மா உருவாக்கினார் என்றும் அன்னை பார்வதிக்குக் கிடைத்ததைப் போன்ற இனிய துணையைக் கிடைக்கச் செய்வதுதான் சுயம்வர பார்வதி ஹோமத்தின் நோக்கம் என்றும் ஆன்றோர்கள் கூறுகின்றனர்.

Swayamvara Parvathi Homam

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

தடைகள் நீங்கி திருமண வரம் பெற, திருமண வாழ்க்கை இனிமையாக மாற நீங்களும் கலந்துகொள்ளலாம். அனுபமிக்க ஆச்சார்யர்களின் வழிகாட்டலுடன் காலை 9 மணியளவில் தொடங்கி, சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் சுயம்வர பார்வதி ஹோம வைபவம் நடைபெறுகிறது. இந்த ஹோம வைபவத்தில் கலந்து கொள்ளும் வரன்களுக்கு குங்குமம், ரட்சை வழங்கப்படும். அனைவரும் வருக! அனுமதி இலவசம்!

Swayamvara Parvathi Homam, which bestows the boon of marriage!
Date: 07.09.2025 (Sunday)
Time: 9 am onwards
Venue: Vijayawada – Edupugallu Sri Parvathi Sametha Kameswarar Temple
You can also participate to remove obstacles and receive the boon of marriage and make your married life sweet.

Starting at 9 am, the Swayamvara Parvathi Homa Vaibhavam will be held with special abhishekam aradhanas. The bride/grooms participating in this Homa Vaibhavam will be given Kumkumam and Rakshai.

* Registration will be done only after confirming your registration number and address details.

Admission is free!

For more details: 044- 6680 2980/07 & 9677069112

వివాహానికి శుభం చేకూర్చే స్వయంవర పార్వతీ హోమం!

వివాహానికి శుభం చేకూర్చే స్వయంవర పార్వతీ హోమం!
తేదీ: 07.09.2025 (ఆదివారం)
సమయం: ఉదయం 9 గంటల నుండి
స్థలం: విజయవాడ – ఏడుపుగల్ శ్రీ పార్వతీ సమేత కామేశ్వర స్వామి ఆలయం

వివాహానికి అడ్డంకులు తొలగిపోయి ఆశీస్సులు పొందడానికి స్వయంవర పార్వతీ హోమంలో పాల్గొనండి. సంతోషకరమైన వైవాహిక జీవితాన్ని కోరుకునే వారు ఖచ్చితంగా ఈ పవిత్ర హోమంలో పాల్గొనాలి.

ఇది ఉదయం 9 గంటల నుండి ప్రత్యేక పూజలు మరియు హోమ కార్యక్రమాలతో ప్రారంభమవుతుంది.

ఈ హోమంలో పాల్గొనే వధూవరులకు కుంకుమ మరియు రక్ష వంటి బహుమతులు అందజేయబడతాయి.

మీ రిజిస్ట్రేషన్ నంబర్ మరియు చిరునామా వివరాలను ధృవీకరించిన తర్వాత మాత్రమే ప్రవేశం మంజూరు చేయబడుతుంది.

ప్రవేశం ఉచితం!

మరిన్ని వివరాలకు: 044-6680 2980 / 07 & 9677069112

வாசகர்கள் கவனத்துக்கு:

ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு குங்குமம், ரட்சை அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் – புதுவை பகுதிகளுக்கு மட்டும்). ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாதவர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *