
சென்னை: வண்டலூர் – மீஞ்சூர் இடையிலான வெளிவட்டச் சாலையை தனியாருக்கு விற்பனை செய்யும் திட்டத்தை திமுக அரசு கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “சென்னையை அடுத்த வண்டலூரில் இருந்து மீஞ்சூர் வரையிலான 60 கி.மீ நீள சென்னை வெளிவட்டச் சாலையை தனியாருக்கு விற்பனை செய்ய திமுக அரசு முடிவு செய்திருக்கிறது. மக்களின் வரிப் பணத்தில் கட்டப்பட்ட நெடுஞ்சாலையை தனியாருக்கும் விற்பனை செய்து, அதன் மூலம் அடுத்த 25 ஆண்டுகளுக்கு தனியார் நிறுவனங்கள் மக்களிடம் சுங்கக் கட்டணம் வசூலித்து சுரண்ட அனுமதிப்பது கண்டிக்கத்தக்கது.