
சென்னை: “தவெக தலைவர் விஜய் அரசியலுக்கு வருவதால், எனது வாக்குகள் குறைந்துவிடும் என்கின்றனர். ஏன் தெரியுமா? அப்படியாவது கட்சியை கலைத்துவிட்டு, ஏதோ ஒரு கட்சியில் கூட்டணி சேர்ந்துவிடுவார்கள் என்றுதான்” என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
இது குறித்து சென்னையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “பாஜகவுடன் கூட்டணி வைத்த கட்சிகளுக்கு அவரவர் விரும்பிய சின்னங்கள் கிடைத்த போது 6 தேர்தலை சந்தித்த என் கட்சியை சின்னத்தை தேர்தல் ஆணையம் பறித்து, அதைக் கொண்டு கர்நாடகாவில் ஒரு கட்சிக்கு கொடுத்தது. நீதிமன்றம், தேர்தல் ஆணையம், வருமான வரித் துறை, அமலாக்கத் துறை, சிபிஐ, என்ஐஏ போன்றவை எல்லாம் தன்னாட்சி அமைப்புகள் என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால், இவை யாவும் அதிகாரத்தில் இருப்பவர்களின் 5 விரல்களாக மட்டுமே செயல்பட்டு வருகின்றன.