• August 11, 2025
  • NewsEditor
  • 0

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கரில் நக்​சலைட்​கள் ஆதிக்​கம் நிறைந்த பகு​தி​யில் கிராம மக்​கள் ஏராள​மானோர் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். பலர் நக்​சலைட்​களால் கொல்​லப்​பட்​டுள்​ளனர். அவர்​களின் குடும்​பங்​களுக்கு மறு​வாழ்வு அளிக்க பிர​தான் மந்​திரி ஆவாஸ் யோஜனா சிறப்பு திட்​டத்​தின் கீழ் 3,000 வீடு​கள் கட்​டும் பணியை மாநில அரசு தொடங்கி உள்​ளது.

இதுகுறித்து அரசு அதி​காரி​கள் கூறிய​தாவது: நக்​சல்​களின் வன்​முறை​யால் பாதிக்​கப்​பட்ட குடும்​பத்​தினருக்கு 3,000 வீடு​கள் கட்​டும் பணி தொடங்​கி​விட்​டது. பயனாளி​களில் சரணடைந்த நக்​சலைட்​களும் அடங்​கு​வர். ஏனெனில், வழக்​க​மான பிர​தான் மந்​திரி ஆவாஸ் யோஜனா திட்​டத்​தின் கீழ் அவர்​கள் பயனடைய முடி​யாது. எனவே, சிறப்பு திட்​டத்​தின் கீழ் அவர்​களின் மறு​வாழ்​வுக்கு வீடுகள் கட்​டித் தரப்​படு​கின்​றன. இவ்​வாறு அதி​காரி​கள் கூறினர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *