
2024 மக்களவைத் தேர்தலின் போது ஆளும் பா.ஜ.க தேர்தல் ஆணையத்தின் பெரும் ஆதரவுடன் “வாக்கு திருட்டு” செய்ததாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்கின்றனர். மேலும், பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் (SIR) தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. தேர்தல் ஆணையத்தின் மீது அதிருப்தியும், நம்பிக்கையின்மையும் அதிகரித்திருக்கிறது. இந்தச் சூழலை எதிர்த்து இந்தியா கூட்டணியின் எம்.பி.க்கள் தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு பேரணியாகச் சென்று போராட்டம் நடத்தப்போவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.
PDA की आवाज़ बुलंद
SIR का बस्ता करो बंद ! pic.twitter.com/KExFdocIbN— Akhilesh Yadav (Son Of PDA) (@SocialistLeadr) August 11, 2025
அதைத் தொடர்ந்து, இன்று காலை 11 மணிக்குப் பிறகு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, என்.சி.பி. எஸ்.சி.பி. தலைவர் சரத் பவார், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி-கள் தேர்தல் ஆணையத்தை நோக்கி பேரணியாகப் புறப்பட்டனர். இந்தப் போராட்டப் பேரணியை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி காவல்துறை தடுப்புகளை வைத்து தடுத்தது. அப்போது உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அகிலேஷ் யாதவ் காவல்துறையின் தடுப்பின் மீது ஏறிகுதித்து போராட்டத்தைத் தொடர்ந்தார்.
அப்போது, “ எங்களைத் தடுக்க காவல்துறையைப் பயன்படுத்துகிறார்கள். நமது ஜனநாயகம் குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. உ.பி.யில், 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்டன. அப்போதுகூட வாக்குகள் திருடப்பட்டது மட்டுமல்லாமல், வாக்குச் சாவடிகளும் கைப்பற்றப்பட்டன. மாநில அரசின் உத்தரவின் பேரில் பணியாற்றிய அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை” என்றார்.
தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி. சையத் நசீர் உசேன், “தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி 300க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் இங்கு பேரணியாகச் செல்கிறோம். ஆனால், எம்.பி.க்களை காவல்துறை கைது செய்கிறது. தேர்தல் ஆணையத்தை சந்திக்க எங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.” என்றார்.
LOP Shri Rahul Gandhi says, "The reality is that they cannot talk. The truth is in front of the country. This fight is not political. This fight is to save the Constitution. This fight is for One Man, One Vote. We want a clean, pure voters list."
Delhi Police detained MPs,… pic.twitter.com/iPvjpmJScW
— Congress Kerala (@INCKerala) August 11, 2025
இதற்கிடையில், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணிக்கு அனுமதி கோரவில்லை என்று டெல்லி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரியாங்கா காந்தி உள்ளிட்ட எம்.பி-கள் கைது செய்யப்பட்டனர். காவல்துறையின் வாகன ஜன்னல் வழியே செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “உண்மை என்னவென்றால், அவர்களால் பேச முடியாது. உண்மை நாட்டின் முன் உள்ளது. இந்தப் போராட்டம் அரசியல் சார்ந்தது அல்ல. இந்தப் போராட்டம் அரசியலமைப்பைக் காப்பாற்றுவதற்கானது. இந்தப் போராட்டம் ஒரு மனிதன், ஒரு வாக்குக்கானது. எங்களுக்கு சுத்தமான, சரியான வாக்காளர் பட்டியல் வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார்.