
சென்னை: “தேர்தல் ஆணையத்தை மோசடி இயந்திரமாக பாஜக மாற்றிவிட்டது.” என்று சாடியுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். மேலும், வாக்குத் திருட்டுக்கு எதிராக ராகுல் காந்தி முன்னெடுக்கும் போராட்டுத்துக்கு திமுக தோளோடு தோள் கொடுக்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பதிவில், “தேர்தல் ஆணையத்தை மோசடி இயந்திரமாக பாஜக மாற்றிவிட்டது. பெங்களூரு மஹாதேவபுரா தொகுதியில் நடந்தது ஏதோ நிர்வாகத் தவறு அல்ல. அது, வாக்கு திருட்டுக்காக அரங்கேற்றப்பட்ட திட்டமிட்ட சதி. வாக்கு திருட்டுப் பற்றி எனது சகோதரர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அளித்த ஆதாரங்கள் இந்த மோசடியின் வீச்சை காட்டுகிறது.