• August 11, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யின்​போது முப்​படைகளுக்கு மத்​திய அரசு முழு சுதந்​திரம் அளித்​த​தால்​தான் களத்​தில் உத்​வேகத்​துடன் செயல்பட முடிந்​தது என்று ராணுவ தளபதி உபேந்​திர திவேதி தெரி​வித்​தார்.

சென்னை ஐஐடி​யில் இந்​திய ராணுவ ஆராய்ச்சி மைய​மான ‘அக்​னிஷோத்’ தொடக்க நிகழ்ச்சி சமீபத்​தில் நடை​பெற்​றது. ராணுவ தளபதி உபேந்​திர திவேதி சிறப்பு விருந்​தின​ராக கலந்​து​கொண்​டு, மையத்தை தொடங்கி வைத்​தார். அவர் பேசி​ய​தாவது: ஜம்மு காஷ்மீரின் பஹல்​காமில் கடந்த ஏப்​ரல் 22-ம் தேதி தீவிர​வா​தி​கள் தாக்​குதல் நடத்​தினர். அடுத்த நாளான 23-ம் தேதி சிறப்பு கூட்​டம் கூட்​டப்​பட்​டது. அதில், பாது​காப்​புத் துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் மற்​றும் முப்​படை தளப​தி​கள் பங்​கேற்​றோம். பதிலடி​யாக ஏதாவது செய்ய வேண்​டும் என்​ப​தில் அனை​வரும் தெளி​வாக இருந்​தோம். என்ன செய்ய வேண்​டும் என்று முடி​வெடுக்க அரசிடம் இருந்து முழு சுதந்​திரம் எங்​களுக்கு வழங்​கப்​பட்​டது. இதன்​மூலம் முழு​மை​யான நம்​பிக்​கை, அரசி​யல் தெளிவு கிடைத்​த​தால், ராணுவ தளப​தி​கள் களத்​தில் விருப்​பப்​படி செயல்பட முடிந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *