
புதுடெல்லி: தேர்தல் ஆணையம் மீது மீண்டும் குற்றம் சாட்டியுள்ள ராகுல்காந்தி, வாக்கு திருட்டு தொடர்பாக புதிய இணையதளத்தை தொடங்கி, அந்த பிரச்சாரத்தில் பொதுமக்கள் இணைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மகாராஷ்டிரா, கர்நாடகா, ஹரியானா போன்ற மாநிலங்களில் ஏராளமான வாக்காளர்கள் போலியாக சேர்க்கப்பட்டுள்ளனர். ஏராளமான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டி வருகிறார். மேலும், பாஜகவுடன் தேர்தல் ஆணையம் கூட்டு சேர்ந்து, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுகிறது என்றும் ராகுல் குற்றம் சாட்டினார். இதற்கு தேர்தல் ஆணையமும் பதில் அளித்துள்ளது.