
புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பல்வேறு கட்சிகளின் தலைவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21-ல் ராஜினாமா செய்தார். இதையடுத்து, வரும் செப். 9-ம் தேதி குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.