
பெங்களூரு மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்த எலக்ட்ரானிக் சிட்டி வரையிலான மெட்ரோ ரயில் இணைப்பான மஞ்சள் வழித்தட சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். புதிய மெட்ரோ ரயிலைக் கொடி அசைத்து இயக்கி வைத்த மோடி, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மற்றும் பள்ளி குழந்தைகள், பொதுமக்களுடன் பயணித்தார்.
இதையடுத்து பேசியிருக்கும் பிரதமர் மோடி, “உலகப் பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளில் டாப் 10 பட்டியலிலிருந்து, டாப் 5 பட்டியலுக்கு முன்னேறியிருக்கிறது இந்தியா. தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் பெங்களூரு, இந்தியாவை தொழில்நுட்பத்தில் தன்னிறைவுப் பெற்ற நாடாக முன்னேற்ற பெரும் பங்காற்ற வேண்டும்.
‘Zero Defect, Zero Effect’ என்ற கொள்கையின் அடிப்படையில் நம் நாட்டிற்குத் தேவையான தொழில்நுட்பப் பொருள்கள் அனைத்தையும் நாமே தயாரிக்கும் அளவிற்கு தன்னிறைவைப் பெற்று முன்னேற வேண்டும். ‘Zero Defect, Zero Effect’ என்றால் எந்தக் கோளாறும் இல்லாத, சுற்றுச் சூழலிற்குத் தீய பாதிப்பை ஏற்படுத்தாத தொழில்நுட்பப் பொருள்களைத் தயாரிக்க வேண்டும் என்பதுதான்.

‘டெக் ஆத்மநிர்பர் பாரத் (Tech Atmanirbhar Bharat)’ என்ற பெயரில் புதிய திட்டத்தின் மூலம் இந்தியா தொழில்நுட்பத்தில் தன்னிறைவு பெற்ற நாடாக உருவாக்குவதில் இந்த அரசு முக்கியக் கவனம் செலுத்தப்போகிறது. இந்தியாவை தொழில்நுட்பத்தில் தன்னிறைவு பெற்ற நாடாக உருவாக்குவதற்கு இதுவே சரியான நேரம். தொழில்நுட்பத்தில் புரட்சிகள் செய்யவும் இதுவே சரியான நேரம்” என்று பேசியிருக்கிறார் பிரதமர் மோடி.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs