
ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே பாம்பனில் மீனவர்களுக்கான பிரத்யேகமான 'கடல் ஓசை' சமுதாய வானொலியின் பத்தாம் ஆண்டு விழா தொடக்க விழா நடைபெற்றது.
கடல் ஓசை சமுதாய வானொலியின் நிறுவனர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ விழாவிற்கு தலைமை வகித்தார். எழுத்தாளர் வறீதையா கான்ஸ்தான்தின், வருவாய் கோட்டாட்சியர் ராஜ மனோகரன். துணை காவல் கண்காணிப்பாளர் மீரா, வள்ளலார் குழுமம் நிர்வாக இயக்குனர் அரவிந்தன், கே.வி.கே., குழுமம் நிர்வாக இயக்குனர் விஜயகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.