
சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்களின் மண்டலங்களை தனியார்மயப்படுத்தக் கூடாது என்பதும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதுமே இவர்களின் கோரிக்கை. இதற்காகத்தான் இரவு பகல் பாராமல் போராடி வருகின்றனர். இந்நிலையில், நேற்று அமைச்சர் சேகர் பாபுவுடன் போராட்டக் குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்திருந்தது. மேலும், அமைச்சர் சேகர் பாபு கூறிய சில கருத்துகளும் சர்ச்சையானது.