
புதுடெல்லி: அமெரிக்கா-இந்தியா வரி பிரச்சினை பூதாகரமாகி வரும் நிலையில், "இந்தியா வல்லரசாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது" என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இந்தியா மீது 50 சதவிகித வரியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த நிலையில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கடுமையாக அமெரிக்காவை விமர்சித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் ரைசன் என்ற பகுதியில் ரயில் உற்பத்தி மையத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.