
அப்செட்டாக மண்டலங்கள் 5 மற்றும் 6 யை தனியார்மயப்படுத்துவதை எதிர்த்தும், பணி நிரந்தரம் கோரியும் சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடி வரும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் 10 வது நாளாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அமைச்சர் சேகர் பாபு தலைமையில் போராட்டக்குழு நடத்திய பலகட்டப் பேச்சுவார்த்தைகளிலும் எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை.
‘கெட்டப் பேராகுது; கலைஞ்சு போங்க!’ – கண்டிஷன் போடும் அமைச்சர் சேகர் பாபு? முறிந்த பேச்சுவார்த்தை
இந்தச் சூழலில் சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடிக் கொண்டிருக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்போராட்டத்திற்கு ஆதரவு தந்து பேசியிருக்கும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “தூய்மைப் பணியை தனியாருக்கு ஏன் கொடுக்க வேண்டும்? பிறகு மாநகராட்சி எதற்கு? ஆந்திராவை சேர்ந்த ராம்கி என்ற நிறுவனத்திற்கு ஆண்டுக்கு ரூ.2,700 கோடியை அரசு தருகிறது. எல்லாவற்றையும் தனியாருக்கு தாரை வார்க்கும் அரசு மதுபானத்தை மட்டும் தானே விற்கிறது” என்று பேசியிருக்கிறார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, “தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கையை சமூகநீதி கண்ணோட்டத்தில் பரிசீலிக்க வேண்டும்; மனித நேயத்தோடு தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை முதல்வர் அணுக வேண்டும் திமுக ஆட்சிக்கு எதிராக இந்த பிரச்னைகளை பிறர் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது” என்று ஆதரவளித்துப் பேசியிருகிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs