
ராஜபாளையம்: ”உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தில் பெறப்படும் மனுக்கள் அடிப்படையில் விரைவில் தகுதி உள்ள அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என வருவாய்த் துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ராஜபாளையம் அருகே சேத்தூர் பேரூராட்சியில் ரூ.5.96 கோடி மதிப்பில் குளிர் சாதன வசதி உடன் திருமண மண்டபம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமை வகித்தார். எம்.பி ராணி, எம்.எல்.ஏ தங்கபாண்டியன் முன்னிலை வகித்தனர். இதில், வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.