
சென்னை: தூய்மைப் பணியை தனியாருக்கு ஏன் கொடுக்க வேண்டும்? பிறகு அரசுக்கு என்ன வேலை?, எல்லாவற்றையும் தனியாருக்கு தாரை வார்க்கும் அரசு மதுபானத்தை மட்டும் தானே விற்கிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தூய்மைப் பணியாளருக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போராட்டத்தில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது அவர் வெளியிட்ட அறிக்கையில் 10 முதல் 12 ஆண்டுகளாக சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்த 12 ஆயிரம் பேரை திடீரென பணி நீக்கும் செய்தது மிகவும் வேதனை அளிக்கிறது என தெரிவித்திருந்தார்.