
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவின் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி பாலியல் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின் ஓராண்டு நினைவாக, தலைமைச் செயலகம் நோக்கி நேற்று பாஜகவினர் ஊர்வலம் சென்றனர்.
இதையடுத்து அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி விரட்டினர். இதுகுறித்து மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி கூறும்போது, “போலீஸார் நடத்திய தடியடியால் பாஜக எம்எல்ஏ அக்னிமித்ரா பால் உள்ளிட்ட பலர் காயமடைந்தனர். மேலும் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் தந்தையும் காயமடைந்தார். இந்த நடவடிக்கைகளுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பதில் சொல்லவேண்டும்’’ என்றார்.