
செவன் ஸ்கீரின் ஸ்டூடியோ சார்பில் விஜய் நடித்த ‘மாஸ்டர்’, ‘லியோ’, விஜய் சேதுபதி நடித்த ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ உள்ளிட்டப் படங்களைத் தயாரித்தவர் எஸ்.எஸ்.லலித்குமார். அவர் மகன் எல்.கே.அக்‌ஷய்குமார் நடிகராக அறிமுகமாகும் படத்துக்கு 'சிறை' என்று தலைப்பு வைத்துள்ளனர்.
இதில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்துள்ளார். நாயகிகளாக அனந்தா, அனிஷ்மா நடித்துள்ளனர். எஸ். எஸ்.லலித்குமார் தயாரிக்கும் இந்தப் படத்தை, அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கி உள்ளார்.