
தனியார் நிகழ்ச்சி ஒன்றில் சிம்ரன் கலந்துகொண்டிருக்கிறார். அப்போது அவரிடம் ரஜினிகாந்த் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
அதற்கு பதிலளித்த சிம்ரன், ” சிம்ரன் ‘கூலி’ படத்தின் டிரயிலரைப் பார்த்தேன். எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. நான் ரஜினி சாரின் தீவிரமான ரசிகை. கண்டிப்பாக முதல் நாள் சென்று படம் பார்ப்பேன்.
‘பேட்ட’ படத்திற்காக படப்பிடிப்பிற்கு செல்லும்போது என்னுடைய காட்சி முடிந்தாலும் நான் அங்கிருந்து போக மாட்டேன். ஒரு மூளையில் அமிர்ந்து ரஜினி சார் நடிப்பதைப் பார்த்துக்கொண்டு இருப்பேன். அவருடன் பணியாற்றியது மிகவும் சந்தோஷமாக இருந்தது.
எங்கு சென்றாலும் ரொம்ப சிம்பிள்ளாக இருப்பார். ஆண்கள், பெண்கள் என எல்லோருக்கும் அவர் பெரிய இன்ஸ்பிரேஷன். தற்போது வாழ்ந்துகொண்டிருக்கும் லெஜண்ட் அவர். ஆகஸ்ட் 14 வெளியாக இருக்கும் அவருடைய ‘கூலி’ படத்திற்கு வாழ்த்துகள்” என்று ரஜினி குறித்து பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…