
பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் எத்தனையோ பேருடன் கிசுகிசுக்கப்பட்டார். ஒரு சில உறவுகளை மட்டும் சுஷ்மிதா சென் வெளிப்படையாக ஒப்புக்கொண்டதுண்டு. அந்த வகையில், ஐ.பி.எல் முன்னாள் தலைவர் லலித் மோடியுடன் சுஷ்மிதா சென் சில காலம் தொடர்பில் இருந்தார்.
லலித் மோடிதான் அவர்களின் உறவை முதல் முறையாக முகநூல் பக்கம் மூலம் பகிர்ந்து கொண்டார். இரண்டு பேரும் விடுமுறையை ஒன்றாக கழித்த புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். அப்புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. அதனை சுஷ்மிதா சென்னும் ஆமோதித்து இருந்தார். ஆனால் அதன் பிறகு அவர்களுக்குள் எந்த வித உறவும் இருப்பதாக செய்தி வரவில்லை. இருவரும் திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியானது.
ஆனால் திருமணம் செய்யவில்லை என்று சுஷ்மிதா சென் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது.
பணத்திற்காக சுஷ்மிதா சென் லலித் மோடியுடன் தொடர்பில் இருப்பதாக செய்திகள் வெளியானது. இறுதியில் லலித் மோடி தனது தோழி ஒருவரை திருமணம் செய்துகொண்டார். அது குறித்தும் சுஷ்மிதா சென் எந்த வித கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார்.
அதேசமயம் சுஷ்மிதா சென் தனது முன்னாள் காதலன் ரோஹ்மனுடன் தொடர்ந்து நட்பை பேணி வருகிறார். லலித் மோடியுடனான பிரேக்அப்பிற்கு பிறகு அந்த உறவு குறித்து சுஷ்மிதா சென் முதல் முறையாக மனம் திறந்து பேசி இருக்கிறார்.
அதில் லலித் மோடியுடனான உறவு குறித்து குறிப்பிட்ட சுஷ்மிதா சென் தனது வாழ்க்கையில் அதுவும் ஒரு அனுபவம் என்று குறிப்பிட்டுள்ளார்.

திருமணம் என்று வரும்போது அதனை முழுமையாக என்னால் நிறைவேற்ற முடியவில்லை என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் சுஷ்மிதா சென் முன்னாள் காதலன் ரோஹ்மன் வெளியிட்டு இருந்த செய்தியில் சுஷ்மிதா சென்னுடனான தங்களது 7-வது ஆண்டு நட்பு குறித்து உணர்ச்சிபூர்வமாக குறிப்பிட்டு இருந்தார்.
சுஷ்மிதா சென் இதுவரை யாரையும் திருமணம் செய்யவில்லை. ஆனால் இரண்டு பெண் குழந்தைகளை எடுத்து வளர்த்து வருகிறார். அவருக்கு கடந்த ஆண்டு திடீரென மாரடைப்பு வந்தது. அதில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.