
அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உணவு டெலிவரி செய்ய வந்த முதியவருக்காக, அயர்லாந்து பெண் $22,000 (19.26லட்சம்) டாலர்களை நிதி திரட்டி கொடுத்துள்ளார்.
வீட்டின் பாதுகாப்பு கேமராவில் பதிவான வீடியோவில் அடிப்படையில் அயர்லாந்து என்ற பெண் உணவு டெலிவரி செய்யும் அந்த முதியவருக்கு உதவ எண்ணி உள்ளார்.
பனேராவிலிருந்து பயணம் செய்து வந்த பிறகு, அந்த முதியவர் மூன்று படிகளில் ஏறி, உணவை டெலிவரி செய்த பிறகு அமைதியாக வெளியேறும் சிசிடிவி காட்சி கண்டு மனம் உருகி அவருக்காக எதாவது செய்ய எண்ணியுள்ளார்.
அந்த சிசிடிவி வீடியோக்களை டிக்டாக்கில் பகிர்ந்து ”இந்த வயதான காலத்தில் முழங்கால் வலியுடன் மூன்று மாடிகள் ஏறி வந்து உணவு டெலிவரி செய்கிறார். இந்த வயதில் யாரும் இவ்வாறு உழைக்க வேண்டியது இல்லை” என்று குறிப்பிட்டு பகிர்ந்து இருக்கிறார் அயர்லாந்து. இது 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை பெற்றது.
இதனையடுத்து அவர் GoFundMe என்ற நிதி திரட்ட பக்கத்தையும் தொடங்கி அதில் $22,000 (19.26லட்சம்) டாலர்களை திரட்டி இருக்கிறார்.
பல நன்கொடையாளர்களும் அந்த வீடியோவை பார்த்த பின்பு நன்கொடையை அளித்துள்ளனர். அதன் பின்னர் அந்த பெண் முதியோரை தொடர்பு கொண்டு அந்த பணத்தை அவருக்கு அளித்துள்ளார்.