• August 10, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ​நாட்​டின் நீள​மான சரக்கு ரயிலை மத்​திய ரயில்வே அமைச்​சகம் அறி​முகம் செய்​துள்​ளது. இந்த ரயி​லானது 354 வேகன்​களு​டன் 4.5 கிலோ மீட்​டர் நீளம் கொண்​ட​தாக அமைந்​துள்​ளது. நாட்​டின் மிக நீள​மான சரக்கு ரயில் என்ற பெரு​மையை பெற்​றுள்ள இதற்கு ருத்​ராஸ்த்ரா என்று பெயர் சூட்​டி​யுள்​ளனர்.

இதுகுறித்து மத்​திய ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் தளத்​தில் கூறிய​தாவது: ருத்​ராஸ்த்ரா ரயில் கடந்த 7-ம் தேதி தனது பயணத்​தைத் தொடங்​கி​யுள்​ளது. 354 வேகன்​களைக் கொண்ட இந்த ரயில் நாட்​டின் மிக நீள​மான சரக்கு ரயி​லாக இருக்​கும். 4.5 கிலோ மீட்​டர் நீளத்தை கொண்​ட​தாக​வும், மிகச்​சிறப்​பாக​வும் இந்த ரயில் உள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *