
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள 17 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு டீன்களும், சுகாதாரத் துறைகளுக்கு புதிய இயக்குநர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருத்துவத் துறை (டிபிஎச்) இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை (டிஎம்எஸ்) இயக்குநர் ராஜமூர்த்தி ஆகியோர் கடந்த மாதம் ஓய்வு பெற்றனர். அதேபோல, குடும்ப நலத்துறை இயக்குநர் பதவிக்கு இதுவரை முழு பொறுப்பு அடிப்படையில் யாரும் நியமிக்கப்படாமல் இருந்தது.