
புதுக்கோட்டை: சமூக வலைதளங்கள் மற்றும் சைபர் குற்றங்களில் இருந்து மாணவிகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ‘அகல் விளக்கு’ என்ற தமிழக அரசின் புதிய திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தை, புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.