
அனிமேஷன் திரைப்படமான ‘மகா அவதார் நரசிம்மா’ உலகம் முழுவதும் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
‘கே.ஜி.எஃப்’, ‘சலார்’, ‘காந்தாரா’ போன்ற பான் இந்தியா படங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மகா அவதார் நரசிம்மா’. அனிமேஷன் திரைப்படமான இதை அஸ்வின் குமார் இயக்கியுள்ளார். கடந்த ஜூலை 25 வெளியான இந்த படம் இரண்டு வாரங்களில் உலகம் முழுவதும் ரூ.150 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.