
நடிகர் சூரி நடிப்பில் வெளியான ‘மாமன்’ திரைப்படம் கடந்த மே 16-ம் தேதி வெளியானது. இந்தப் படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தார். அந்தப் படத்தின்போதே ஐஸ்வர்யா லட்சுமிக்கும் – சூரிக்கும் இடையே நல்ல நட்பு உருவானதாக இருவரும் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் சூரியின் சொந்த ஊரில் உள்ள கோவில் திருவிழாவில் பங்கேற்க ஐஷ்வர்யா லட்சுமி கலந்து கொண்டார். இது தொடர்பாக ஐஸ்வர்யா லட்சுமி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நான் அந்த நாளில் உணர்ந்த அன்புக்கு, அங்கீகாரத்திற்கு, உங்களோடு சேர்ந்திருப்பதுபோல் உணர்த்தியதற்காக பதிலுக்கு என்னால் என்ன செய்ய முடியும் என தெரியவில்லை. சூரி சார், எந்த ஒரு பெண்ணும் நம்ப விரும்பும் ஒரு நல்ல மனிதராக இருப்பதற்கு நன்றி.
ராஜாக்கூருக்கு என்னை அழைத்து, உங்கள் கிராமத்தின் மகிழ்ச்சியில் பங்கெடுக்க அனுமதித்ததற்கும் நன்றி. மதுரை எனக்கு இப்போது இன்னும் அதிக மகிழ்ச்சியைத் தருகிறது. மீனாட்சி அம்மன் அங்கே இருப்பதனால் மட்டும் அல்ல, நீங்கள் என்னை உங்கள் அழகான குடும்பத்தின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டதினாலும். நீங்கள் எனக்கு காட்டிய அன்பு அனைத்தும் மிக அழகாகவும், மனதைக் கலங்கவைக்கும் வகையிலும் இருக்கிறது. சிறியக் குடும்பத்தில் வளர்ந்த என்னைப் போன்ற ஒருவருக்கு, இது இதயத்திற்கு நெருக்கமானது தான். இந்த அளவு அன்பு உணர முடியும் என நான் நினைத்ததே இல்லை.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…