
சென்னை: மாநில கல்விக் கொள்கை, இளைய தலைமுறையினர் எதிர்காலம் முன்வைக்கும் சவால்களை எளிதில் எதிர் கொள்ளும், திறனையும், தன்னம்பிக்கையினையும் ஊக்கப்படுத்தும் திசை வழியில் அமைந்துள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் மாநில கல்விக் கொள்கையை நேற்று முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். மாநில கல்விக் கொள்கை தமிழ்நாட்டின் தனித்துவப் பண்புகளை உள்வாங்கி உருவாக்கப்பட்டுள்ளது. மொழிக் கொள்கை குறித்து விரிவாக ஆய்வு செய்து இரு மொழிக் கொள்கையை மீண்டும் உறுதி செய்துள்ளது. அனைத்து வகைப் பள்ளிகளிலும் 10 ஆம் வகுப்பு வரை தமிழ்மொழி கட்டாயம் பயிற்றுவிக்க வேண்டும் என பணித்துள்ளது.