
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “எம்ஜிஆர் குறித்து பேசுவதற்கு திருமாவளவனுக்கு தகுதி இல்லை. எம்ஜிஆர் தமிழ்நாட்டு மக்களுக்கு தெய்வமானவர். அப்படிப்பட்டவரை விமர்சனம் செய்தால் அரசியலில் காணாமல் போய்விடுவார்கள். ஒரு சாதியை வைத்து மட்டும் அரசியல் நடத்துவது என்பது இயலாத காரியம். எம்.ஜி.ஆர்., ஆனாலும், ஜெயலலிதா ஆனாலும் மற்றும் அவர்கள் மறைவுக்கு பிறகும் அதிமுகவை பொறுத்தவரை சாதி, மதத்திற்கு அப்பார்பட்ட கட்சி. அதிமுகவில் எவ்வளவு சாதி சங்கங்கள், எவ்வளவு மதத்தை சேர்ந்தவர்கள் எங்களது இயக்கத்தில் இருக்கின்றனர் தெரியுமா.
நாங்கள் ஒற்றுமையாக செயல்படுகிறோம். சில பேருக்கு அது பொறுக்கவில்லை, எரிச்சல், வெறுப்பின் வெளிப்பாடு தான் இப்படிப்பட்ட வார்த்தையை கக்கிக் கொண்டிருக்கின்றனர். திமுக கூட்டணியில் கருத்து வேறுபாடு உள்ளது. இன்னும் 8 மாதத்தில் கூட்டணி நிலைக்குமா நிலைக்காதா என்பது குறித்து செய்தியாளர்கள் பேச்சிலேயே தெரிகிறது. தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலம் உள்ளது. அந்த 8 மாதத்தில் சிறப்பான கூட்டணி அமையும். அப்போது அனைவருக்கும் தெரிவிப்போம்” என்றார்.