• August 9, 2025
  • NewsEditor
  • 0

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு டெல்லியை சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகின்றான். ஏற்கனவே சல்மான் கானுக்கு நெருக்கமான மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கை லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் மும்பையில் சுட்டுக்கொலை செய்தனர். இதே போன்று சல்மான் கான் வீட்டிலும் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இத்துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் சல்மான் கானுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சல்மான் கானின் பண்ணை வீட்டிலும் தாக்குதல் நடத்த பிஷ்னோய் கேங்க் திட்டமிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது காமெடியன் கபில் சர்மாவின் கனடா ரெஸ்டாரண்ட் மீது லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இத்துப்பாக்கிச்சூடு குறித்து லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளி ஹார்ரி பாக்ஸர் வெளியிட்டுள்ள மிரட்டல் ஆடியோ செய்தியில், ”நெட்பிளிக்ஸ் நிகழ்ச்சி தொடக்க விழாவில் சல்மான் கானை கபில் சர்மா சந்தித்து பேசினார். எனவே கபில் சர்மாவிற்கு பாடம் கற்றுக்கொடுக்கவேண்டியது அவசியமாகிறது. சல்மான் கானுடன் பணிபுரிபவர்கள் அதிலிருந்து விலகவில்லை என்றால் மும்பையின் சூழ்நிலையை அழித்துவிடுவோம்.

நாங்கள் எங்களது எதிரிகளுக்கு எதிராக AK 47 ரக துப்பாக்கிகளை பயன்படுத்துவோம். சிறிய நடிகரோ அல்லது சிறிய இயக்குனரோ யாராக இருந்தாலும் சல்மான் கானுடன் பணியாற்றினால் அவர்களை விட்டுவைக்க மாட்டோம். அவர்களை கொலை செய்வோம். அவர்களை கொலை செய்ய எந்த எல்லைக்கும் செல்வோம்”என்று குறிப்பிட்டுள்ளான். இக்கொலை மிரட்டல் விடுத்துள்ள ஹார்ரி பாக்ஸரின் உண்மையான பெயர் ஹரிசந்த் ஆகும். ஹரிசந்த் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்கு சென்று அங்கிருந்து செயல்பட்டு வருகிறான்.

கபில் சர்மா, லாரன்ஸ் பிஷ்னோய்

கனடாவில் கபில் சர்மாவின் ரெஸ்டாரண்ட் மீது லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் துப்பாக்கிச்சூடு நடத்திய பிறகு லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் வெளியிட்ட செய்தியில்,”கபில் சர்மாவின் ரெஸ்டாரண்டில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்கிறோம். எங்களது அடுத்த இலக்கு மும்பையில் நடைபெறும் என்று குறிப்பிட்டு இருந்தனர். அந்த மிரட்டலை தொடர்ந்து இப்போது பாலிவுட் இயக்குனர் மற்றும் நடிகர்களுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கேங்க் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இக்கொலை மிரட்டல் சம்பவத்தை தொடர்ந்து சல்மான் கானுக்கு மிகவும் நெருக்கமான தயாரிப்பாளர் மற்றும் நடிகர்களின் பாதுகாப்பை மறு ஆய்வு செய்ய இருப்பதாக மும்பை போலீஸார் தெரிவித்துள்ளனர். மும்பையில் துப்பாக்கியை விற்பனை செய்ய முயன்றது தொடர்பாக ஹரியானாவை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பிஷ்னோய் கேங்கிற்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *