
புதுடெல்லி: சகோதர உறவை போற்றும் ரக்‌ஷா பந்தன் பண்டிகை ஆகஸ்ட் 9-ம் தேதியான இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இது, சகோதரிகள் மீது சகோதரர்கள் காட்டும் பாசப் பண்டிகை ஆகும்.
ஒரே குடும்பத்தில் பிறந்த உடன்பிறப்புகள் மற்றும் உடன்பிறவா சகோதர, சகோதரிகளுக்கு இடையில் கொண்டாடப்படும் பண்டிகை. இதை, ஷ்ரவண் பூர்ணிமா புனித நூல் அல்லது ராக்கி கயிறு எனும் நூலை சகோதரர்களின் கையில் கட்டி சகோதரிகள் மகிழ்கிறார்கள்.உலகளாவிய பல்வேறு வகைப் பாதுகாப்பு மற்றும் மதநல்லிணக்கத்தையும் இந்த பண்டிகை பிரதிபலிக்கிறது. சமூகம் மற்றும் இயற்கையின் மீதான ஆழமான அர்ப்பணிப்பிற்கும் இந்த பண்டிகை ஒரு சக்திவாய்ந்த சான்று.