
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மொளசூர் கிராமத்தில் பல்லவர் கால கொற்றவை சிலையும், செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தில் மூத்ததேவி சிற்பமும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக விழுப்புரத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளரான எழுத்தாளர் கோ.செங்குட்டுவன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, “திண்டிவனம் அருகே உள்ள மொளசூர் ஓடைப் பகுதியில் கொற்றவை சிற்பம் காணப்பட்டது. 5 அடி உயரமுள்ள பலகைக் கல்லில் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. நீண்ட தலையலங்காரம் மற்றும் அணிகலன்களுடன் எருமை தலையின் மீது நின்ற நிலையில் கொற்றவை காட்சியளிக்கிறாள். அவளது 7 கரங்களில் ஆயுதங்கள் காணப்படுகின்றன. முன் இடது கரம் இடுப்பில் வைத்த நிலையில் உள்ளது.