• August 9, 2025
  • NewsEditor
  • 0

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் குல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக ஸ்ரீநகரை தளமாகக் கொண்டு செயல்படும் ராணுவத்தின் ஒரு பிரிவான சினார் கார்ப்ஸ், வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தேசத்திற்கான கடமையில் ஈடுபட்ட துணிச்சல்மிகு வீரர்களான பிரித்பால் சிங், செப் ஹர்மிந்தர் சிங் ஆகியோர் உச்ச தியாகத்தை புரிந்துள்ளனர். அவர்களின் தியாகத்தை ராணுவம் மதிக்கிறது. அவர்களின் தைரியமும் அர்ப்பணிப்பும் என்றென்றும் எங்களுக்கு ஊக்கமளிக்கும். இந்திய ராணுவம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. அதோடு, பாதிக்கப்பட்டு துயரத்தில் உள்ள குடும்பங்களுடன் ராணுவம் ஒற்றுமையுடன் நிற்கிறது. பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடர்கிறது," என்று தெரிவித்துள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *