
தாம்பரம்: தாம்பரத்தில் ரூ.110 கோடியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
குரோம்பேட்டையில் உள்ள தாம்பரம் தாலுகா அரசு மருத்துவமனையை செங்கல்பட்டு மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த தமிழக அரசு முடிவு செய்து மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தி 2021-ம் ஆண்டு அனுமதி வழங்கியதோடு, ரூபாய் 110 கோடி இதற்காக ஒதுக்கப்பட்டது.