
சென்னை: சில நாட்களுக்கு முன்னர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவுக்கு திமுகவில் மாநில அளவிலான முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘புலவர் இந்திரகுமாரி வகித்து வந்த திமுக இலக்கிய அணித்தலைவர் பொறுப்பில் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா நியமிக்கப்படுகிறார். திமுக சட்ட திட்ட விதி 31, பிரிவு 10-ன்படி தி.மு.க. இலக்கிய அணி தலைவராக அ. அன்வர்ராஜா தலைமை கழகத்தால் நியமிக்கப்படுகிறார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.