
புதுடெல்லி: சமஸ்கிருத மொழி அறிவு மற்றும் வெளிப்பாட்டின் காலத்தால் அழியாத ஆதாரமாக விளங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"இன்று, ஷ்ரவன் பூர்ணிமாவில், உலக சமஸ்கிருத தினத்தைக் கொண்டாடுகிறோம். சமஸ்கிருதம் என்பது அறிவு மற்றும் உணர்வு வெளிப்பாட்டின் காலத்தால் அழியாத ஆதாரமாகும். அதன் தாக்கத்தை பல்வேறு துறைகளில் காணலாம். இந்த நாள் சமஸ்கிருதத்தைக் கற்று பிரபலப்படுத்தும் உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு நபரின் முயற்சியையும் பாராட்ட ஒரு சந்தர்ப்பமாகும்.