• August 9, 2025
  • NewsEditor
  • 0

மாமல்லபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு பாமக தலைவர் அன்புமணி தலைமை தாங்கினார்.

இந்தப் பொதுகுழுவிற்கு பாமக நிறுவனர் ராமதாஸிற்கு அழைப்பு விடுக்கப்பட்டும், அவர் கலந்துகொள்ளவில்லை. ஆனாலும், பொதுக்குழு மேடையில் அவருக்காக ஒரு நாற்காலி ஒதுக்கப்பட்டிருந்தது.

அன்புமணி | பாமக பொதுக்குழு கூட்டம்

இந்தப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 19 தீர்மானங்கள்

1.பாட்டாளி மக்கள் கட்சியின் உட்கட்சி தேர்தலை நடத்த ஓராண்டு அவகாசம் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகியோர் 2026 ஆகஸ்ட் வரை பதவியில் நீடிப்பார்கள்.

2. வன்னியர்களுக்கு விரைவில் இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்.

3. தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் விடுதலை நாள் அறிவிப்பாக தமிழக அரசு வெளியிட வேண்டும்.

4. சமூகநீதி கடமைகளை நிறைவேற்ற மறுக்கும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு கண்டனம்.

5. அன்புமணி மேற்கொண்டு இருக்கும் மக்கள் உரிமை மீட்பு பயணத்தையும் அதன் நோக்கத்தையும் வெற்றி பெற செய்ய பாமக உறுதி ஏற்கிறது.

6. பெண்கள் பாதுகாப்பு சட்டம் ஒழுங்கை உறுதி செய்ய தவறிய திமுக அரசுக்கு கண்டனம்.

7. தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் நடமாட்டத்தை முழுமையாக தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

8. தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதே பாட்டாளி மக்கள் கட்சியின் இலக்காகும்.

9. தமிழ்நாட்டில் நான்கு முறை உயர்த்தப்பட்ட மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும்.

அன்புமணி | பாமக பொதுக்குழு கூட்டம்
அன்புமணி | பாமக பொதுக்குழு கூட்டம்

10. தமிழ்நாட்டிற்கு வந்த தொழில் முதலீடுகள் குறித்து தமிழக அரசு விரிவான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

11. தமிழ்நாட்டில் காவிரி கொள்ளிடம் பாலாறு உள்ளிட்ட வாய்ப்பு உள்ள அனைத்து ஆறுகள் குறுக்கேயும் தடுப்பணைகள் கட்டுவதை ஒரு இயக்கமாக தமிழக அரசு மாற்ற வேண்டும்.

12. காவிரி கோதாவரி நதிகள் இணைப்பு திட்டத்தின் பணிகளை விரைவு படுத்த வேண்டும்.

13. தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய ஒருங்கிணைந்த கல்வி திட்டம் நிதி ₹2,151 கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

14. உடனடியாக தமிழக அரசு ஒரு லட்சம் ஆசிரியர்களை நியமிக்க தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

15. அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 9 ஆயிரம் உதவி பேராசிரியர்களை நியமிக்க வேண்டும்.

16. மக்களை ஏமாற்ற மோசடி திட்டங்களை செயல்படுத்தும் திமுக அரசுக்கு கண்டனம்.

17. அரசு ஊழியர்கள் ஆசைகளுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

18. அரசு துறைகளில் காலியாக உள்ள 6.5 லட்சம் இடங்களை நிரப்ப இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

19. சிங்கள கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *