
சென்னை: விநாயகர் சிலைகளை இயற்கை பொருட்களால் மட்டுமே செய்ய வேண்டும் என்று மாசுகட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் தொன்று தொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கிவருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பொதுமக்களாகிய நமக்கு பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகள் (கடல், ஆறு, ஏரி மற்றும் குளம்) நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகின்றன.