
தேனி பங்களாமேடு பகுதியை சேர்ந்தவர்கள் வடிவேல் – அருள் ஆனந்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள். அருள் ஆனந்தி ஆண்டிப்பட்டியில் உள்ள நிறுவனத்தில் கூலி வேலைக்கு சென்று வருகிறார். ஆனந்தி வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் இருந்த 14 வயது மகன் கோகுல் வீட்டு அருகே உள்ள தண்டவாளத்தை கடக்க முற்பட்டுள்ளார். அப்போது தண்டவாளங்கள், ரயில் மின்கம்பங்கள் பராமரிப்பு பணிக்காக மதுரையை நோக்கி சென்ற ரயில் இஞ்சின் சிறுவன் மீது மோதியதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீஸார் உயிரிழந்த சிறுவனின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தேனி போலீஸார் மற்றும் ரயில்வே போலீஸார் சிறுவன் உயிரிழந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.