• August 9, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தொழிலா​ளர் மற்​றும் திறன் மேம்​பாட்டு துறை சார்​பில் சேப்​பாக்​கம் – திரு​வல்​லிக்​கேணி தொகு​தி​யில் 100 பெண் மற்றும் திருநங்கை ஓட்​டுநர்​களுக்கு தலா ரூ. 1 லட்​சம் மானி​யத்​துடன் ஆட்​டோக்கள் வழங்​கும் நிகழ்ச்சி சென்னை ராயப்​பேட்டை ஒய்​எம்​சிஏ மைதானத்​தில் நேற்று நடை​பெற்​றது. இந்த நிகழ்ச்​சி​யில் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் பங்​கேற்று, அமைப்பு சாரா பெண் மற்​றும் திருநங்கை ஓட்​டுநர்​களுக்கு ஆட்​டோக்​களை வழங்​கி​னார்.

நிகழ்ச்​சி​யில் உதயநிதி ஸ்டா​லின் பேசி​ய​தாவது: தற்​போது தொழிலா​ளர் நலத்​துறை சார்​பில் 20 அமைப்பு சாரா தொழிலா​ளர் நல வாரி​யங்​கள் செயல்​பட்டு வரு​கின்​றன. ஆண்​களுக்கு நிக​ராக பெண்​களும் முன்​னேற வேண்​டும் என ஏராள​மான திட்​டங்​களை முதல்​வர் ஸ்டா​லின் செயல்​படுத்தி வரு​கிறார்.மகளிர் விடியல் பயணம் திட்​டம், புதுமை பெண் திட்​டம், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்​டம் என பெண்​களின் முன்​னேற்​றத்​துக்​காக ஏராள​மான திட்​டங்​களை முதல்​வர் உரு​வாக்கி கொடுத்து கொண்டிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *