
விஜயகாந்தின் 100-வது திரைப்படமான ‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம் ஆகஸ்ட் 22-ம் தேதி ரீ ரிலீஸாகிறது. படத்தின் மறு வெளியீட்டையொட்டி நேற்று சென்னை கமலா திரையரங்கில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.
படக்குழுவினர் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு விஜயகாந்த் உடனான நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறார்கள்.
இத்திரைப்படம் தனக்கு தமிழ் சினிமாவில் ஏற்படுத்திக் கொடுத்த வரவேற்பு பற்றி பேசியிருக்கிறார் ரம்யா கிருஷ்ணன்.
ரம்யா கிருஷ்ணன் பேசும்போது, “தமிழில் நான் கரியரைத் தொடங்கியபோது எனக்கு பெரிதாக வெற்றிகள் கிடைக்கவில்லை. பிறகு, தெலுங்கு சினிமாவிற்கு சென்று நடித்தேன்.
அப்படியான நேரத்தில்தான் எனக்கு ‘கேப்டன் பிரபாகரன்’ வாய்ப்பு வந்தது. இந்தப் படத்தில் நான் முதல் ஹீரோயின் கிடையாது.
ஆனால், பெரும் வரவேற்பை இப்படம் எனக்குத் தேடித் தந்தது. இன்று வரை இப்படத்தில் வரும் ‘ஆட்டமா தேரோட்டமா’ பாடலை நினைவு கூர்கிறார்கள்.

அப்படியான வாய்ப்பை எனக்கு கொடுத்த இயக்குநர் செல்வமணி சாருக்கு நன்றி. இன்று நான் கேப்டனை மிகவும் மிஸ் செய்கிறேன்.
இன்று அவர் இருந்திருந்தால் ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.
இந்த திரைப்படம் ரீ ரிலீஸில் பெரும் வெற்றி பெறுவதை அவர் பார்த்துக் கொண்டுதான் இருப்பார்.
இன்று குட்டி ‘கேப்டன் பிரபாகரன்’ ஒரு கட்சியை வழிநடத்திச் செல்கிறார். அவருக்கும் என் வாழ்த்துகள். செல்வமணி சார் ராக் இட்!” எனப் பேசினார்.