
சென்னை: நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் (80). சென்னை வந்திருந்த நிலையில் நேற்று காலை வீட்டில் அவர் கால் தவறி கிழே விழுந்ததில், அவரது தலையில் அடிப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மருத்துவர் குழு சிகிச்சை அளித்து வருகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் அவர் விரைவில் நலம்பெற்று, மீண்டும் நல்ல உடல்நிலைக்கு திரும்ப வேண்டும் என்று சமூக வலைதள பதிவில் தெரிவித்துள்ளனர்.