• August 8, 2025
  • NewsEditor
  • 0

பீகார் மாநிலத்தில் போலி குடியிருப்பு சான்றிதழ் வழக்கு அதிகரித்து வரும் நிலையில், சமஸ்திபூர் மாவட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பெயரில் விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.

மொஹியுடின்நகர் மண்டலத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் டிரம்பின் புகைப்படம் மற்றும் பெயரை பயன்படுத்தி ஆன்லைனில் குடியிருப்புச் சான்றிதழ் விண்ணப்பித்துள்ளார். இதில் முகவரியாக உள்ளூர் முகவரியை அளித்திருக்கிறார்.

ஜூலை 29 அன்று இந்த விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் விண்ணப்பத்தின் புகைப்படம், ஆதார், எண் பார் கோடு மற்றும் முகவரி விவரங்களில் மோசடி இருப்பதை அறிந்து மண்டல அலுவலர் இந்த விண்ணப்பத்தை நிராகரித்துள்ளார்.

இது தொடர்பாக உள்ளூர் சைபர் காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்டவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மண்டல அலுவலர் தெரிவித்திருக்கிறார்.

ஆன்லைன் போர்ட்டலில் தொடர்ந்து போலியான தகவல்கள், டிஜிட்டல் ஆவணங்களின் நம்பகத்தன்மையில்லாமை என அடையாளம் தெரியாத மோசடிகள் அதிகமாக நடைபெற்று வருவதால் இதனை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *