• August 8, 2025
  • NewsEditor
  • 0

‘‘சார், எனக்குப் பெரிசா பணம் சேர்க்கணுங்கிற ஆசை இருக்கு. ஆனா,  சம்பாதிக்கிற பணம் அத்தனையும் செலவாயிடுது…’’

‘‘சார், எனக்கு மாசாமாசம் 2 லட்சம் கிடைக்குது. ஆனா, 10,000 ரூபா மாசக் கடைசியில மிஞ்ச மாட்டேங்குது.’’

இது மாதிரி சொல்கிற பலரையும் நாம் பார்த்திருப்போம். இவர்களின் பிரச்னைக்கு முக்கியமான காரணமே, கேஷ் ஃப்ளோ மேனேஜ்மென்ட்தான். அப்படி என்றால், நமக்கு வருமானத்தைச் சரியாக நிர்வாகம் செய்வது. நிதி நிர்வாகத்தின் அடிப்படை இந்த கேஷ் ஃப்ளோ மேனேஜ்மென்ட்தான். நிதிச் சுதந்திரம் அடைவதற்கும் இதுதான் அடிப்படையான விஷயமாக இருக்கிறது.

செலவு நிர்வாகம்

வரவும், செலவும்…

குடும்ப நிதி நிர்வாகத்தில் அடிப்படையான விஷயம் என்ன?

நாம் எவ்வளவு சம்பாதிக்கிறோமா, அதில் 50% – 60% வரை மட்டுமே நம் அனைத்து செலவுகளும் இருக்க வேண்டும். வரவைவிட நாம் அதிகமாகச் செலவு செய்தால், அடுத்துவரும் நாள்களை நாம் கடன் வாங்கித்தான் செலவு செய்ய வேண்டி இருக்கும்.

கடன் வாங்கினால், வட்டி கட்ட வேண்டியிருக்கும். வட்டி கட்டினால், நம் செலவு இன்னும் அதிகரிக்கவே செய்யும். எனவே, கடன் வாங்காமல் நிலைமையைச் சமாளிப்பது அவசியம். தவிர, 50% – 60% வரை செலவு செய்தபின் மிச்சமிருக்கும் பணத்தைச் சேமிப்பது அவசியம்; சேமித்த பணத்தை முதலீடு செய்வதும் அவசியம்.

குடும்ப பட்ஜெட்

வீட்டு பட்ஜெட் முக்கியம் பாஸ்…

உங்களைச் சுற்றி இருக்கிற 100 பேரிடம், ‘நீங்கள் மாதந்தோறும் பட்ஜெட் போட்டு செலவு செய்கிறீர்களா?’ என்று கேளுங்கள். 100 பேரில் 60% பேர் பட்ஜெட் போடுவதே இல்லை என்பார்கள். 30% பேர், பட்ஜெட் போடுகிறோம். ஆனால், அதன்படி நடப்பதில்லை என்பார்கள். வெறும் 10% பேர் மட்டுமே சரியாக பட்ஜெட் போட்டு அதன்படி நடப்பவர்களாக இருப்பார்கள்.

ஆக, முதலில் நீங்கள் பட்ஜெட் போட்டு அதன்படி செலவு செய்கிறீர்களா என்று பாருங்கள். ஏன் பட்ஜெட் போட வேண்டும்…? பட்ஜெட் போட்டு செலவு செய்தால்தான், நாம் எதற்கெல்லாம் செலவு செய்கிறோம். எவ்வளவு பணத்தைச் செலவு செய்கிறோம், எவ்வளவு பணம் மிச்சம் ஆகிறது என்பது தெரியும். அப்படி மிச்சமாகும் பணத்தில் எவ்வளவு பணத்தை முதலீடு செய்வது என்பதைப் பற்றி எல்லாம் யோசிக்க முடியும்.

பட்ஜெட்

எப்படி பட்ஜெட் போடுவது?

எப்படி பட்ஜெட் போடுவது என்கிற கேள்வி பலருக்கும் இருக்கலாம். ஆனால், பட்ஜெட் போட்டுத்தான் செலவு செய்ய வேண்டும் என்கிற எண்ணம் ஒவ்வொருவரும் நினைத்துவிட்டால், பட்ஜெட் போடுவதற்கான வழி கிடைத்துவிடும்.

இப்படித்தான் பட்ஜெட் போட வேண்டும் என எந்த வரைமுறையும் கிடையாது. அதைக் காகிதத்தில் போடலாம். கம்ப்யூட்டரில் போடலாம்; சமீபத்தில் இலவசமாகக் கிடைக்கிற ஆப்கள் மூலமும் நீங்கள் பட்ஜெட் போடலாம். Money Manager என்று ஒரு ஆப் இருக்கிறது. இந்த ஆப்பில் உங்கள் செலவுகள் அனைத்தையும் குறித்து வைத்துக் கொள்ளலாம். நீங்கள் எதற்காக எவ்வளவு செலவு செய்கிறீர்கள் என்பதை இந்த ஆப் உங்களுக்குத் தெளிவாக எடுத்துச் சொல்லிவிடும்.

இது Good budget, Mon3fy, Money view என பட்ஜெட் டூல்களும் இருக்கிறது. இந்த டூல்களைச் சரியானபடி பயன்படுத்திக்கொள்வதன் மூலம் உங்கள் பட்ஜெட் சூப்பரா, சுமாரா அல்லது டேஞ்சலர் ஜோனில் இருக்கிறீர்களா என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியும்.

பட்ஜெட்

பட்ஜெட்தான் அடிப்படை….

பட்ஜெட் போட்டு செலவு செய்தாலே உங்கள் நிதி நிர்வாகம் செய்வதில் உங்கள் கட்டுப்பாட்டில் வந்துவிடும். அப்போது உங்களால் சிக்கனமாக பணத்தைச் செலவு செய்ய முடியும். எதிர்காலத்துக்குத் தேவையான பணத்தையும் முதலீடு செய்ய முடியும். இப்படிச் செய்வதன் மூலமே நீங்கள் நிதிச் சுதந்திரத்தை அடைய முடியும்!

நீங்களும் நிதிச் சுதந்திரம் பெற வேண்டுமா? ‘லாபம்’ மூலம் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் முதலீட்டைத் துவங்க, க்ளிக் பண்ணுங்க:

கால்: 9600296001 | வெப்சைட்: 

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *