
சென்னை: பாஜகவின் அடிமையாய் மாறி, அதிமுகவை அடமானம் வைத்தவர், தமிழ்நாட்டு வாக்காளர்களையும் டெல்லியிடம் அடமானம் வைக்கத் துணிந்துவிட்டாரா? இல்லை என்றால் SIR என்ற முறைகேடான வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றி இதுவரை எடப்பாடி பழனிசாமி வாய் திறக்காதது ஏன்? என தமிழக அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் கேள்வியெழுப்பியுள்ளார்
இதுகுறித்து துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘போலி வாக்காளர்களைச் சேர்த்து பாஜகவுக்கு துணை போகும் அடிமை அதிமுகவுக்கு எதிராக தமிழ்நாடு ஓரணியில் திரண்டு நின்று வெல்லும்.